Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இன்னும் 2 மாதங்களில் நடிகர் சங்கம் திறப்பேன்,  திருமணமும் செய்வேன்: " ரெட் பிளவர்"  பட விழாவில் விஷால் உறுதி !

விஷாலின் 35வது படம் இனிதே துவங்கியுள்ளது. தொடர்ந்து இன்று நடந்த ‘ரெட் பிளவர்’ திரைப்பட நிகழ்வில் கலந்து கொண்ட போது, நடிகர் விஷாலிடம் நடிகர் சங்க கட்டடம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ” 9 வருடங்கள் தாக்கு பிடித்துவிட்டதாகவும் இன்னும் 2 மாதங்களில் பணிகள் நிறைவடையும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது பிறந்தநாளான ஆக. 29-ம் தேதி நல்ல செய்தி வரும் எனவும் கூறியுள்ளார். சொன்னபடி தனது திருமணம் நடிகர் சங்க கட்டடத்தில் நடக்கும் என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.'

தொடர்ந்து பேசிய அவர், ”இனி படம் ரிலீஸாகும் முதல் 3 நாட்கள், அதாவது 12 காட்சிகளுக்கு தியேட்டர் வளாகத்திற்குள் ரிவ்யூ பேட்டி எடுக்க யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்” என்று கேட்டு கொண்டார். நடிகர் விஷால் நடிகை சாய் தன்சிகாவை காதலிக்கிறார். இது தொடர்பாக அண்மையில் நடந்த ஒரு திரைப்பட விழாவில், இருவரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்க, விக்னேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “ரெட் ஃப்ளவர்” (Red flower). ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கியிருக்கிறார். ஆகஸ்ட் 8ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடிகர் விஷால், இயக்குனர்கள் பி.வாசு, சுராஜ் மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள கோலாகலமாக நடைபெற்றது. பல வருடங்கள் இடைவேளைக்குப் பிறகு நடிகர் விக்னேஷ் நடிக்கும் திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.