Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

திருமணம் எப்போது? போட்டோ கிராபர்களை மடக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்

சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் சினிமாவில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்கும் நடிகைகளில் ஒருவர். தற்போது இவர் தமிழில் 3 படங்களிலும், கன்னடத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என நிறைய படங்கள் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடைசியாக தெலுங்கில் சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படம் வெளியாகி, பெரிய ஹிட்டானது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை ஐஸ்வர்யா உயர்த்தியுள்ளார்.

35 வயதாகும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்ற அவரிடம் திருமணம் எப்போது என போட்டோகிராபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர், ‘‘முதலில் நீங்கள் சொல்லுங்கள், திருமணம் செய்யலாமா, வேண்டாமா’’ என போட்டோகிராபர்களையே மடக்கி கேள்வி கேட்டார். அதற்கு பலரும் ‘வேண்டாம்’ என்றார்கள். உடனே சிரித்த ஐஸ்வர்யா ராஜேஷ், ‘‘கண்டிப்பாக திருமணம் நடக்கும், நானே முதலில் பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கிறேன்’’ என கூறினார்.