Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பல நடிகைகளிடம் இல்லாதது என்னிடம் உள்ளது - தேஜு அஸ்வினி

சந்தானம் நடித்த ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சந்தானம் பாடும் கானா பாடலில் கேமியோ நடனம் ஆடியவர் தேஜு அஸ்வினி. அதனைத் தொடர்ந்து ‘கல்யாண சமையல் சாதம்’ என்ற வெப் தொடரில் நடித்து பிரபலமானார். பிறகு கவின் நடித்த ‘அஸ்க்கு மாரோ’ என்ற ஆல்பம் பாடலில் நடித்து கவனம் பெற்றார். மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வம் கொண்ட தேஜு அஸ்வினி, ‘என்ன சொல்லப்போகிறாய்’ என்ற படத்தில் அஷ்வின் ஜோடியாக நடித்து ஹீரோயினாக தமிழ் சினிமாவில் கால்பதித்தார். தற்போது மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 12ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் சமீபத்தில் தேஜூ அஸ்வினி அளித்த பேட்டியில், ”நான் சினிமாவுக்கு வந்தது எதிர்பாராத ஒன்று. சினிமா விளம்பரம் சார்ந்த ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்து கொண்டிருந்தபோது, ஒரு குறும்படத்தில் நடித்தேன். பின்னர் மாடலிங் துறையில் சில ஆண்டுகள் பணியாற்றி வந்தேன். அதன்பின்னர் சினிமாவுக்கு வந்தேன். பொருளாதார சூழலும், கனவும் சேர்ந்தது தான் எனது சினிமா பயணம். என் வாழ்க்கை தரத்தை உயர்த்தியது இந்த சினிமாதான். அப்படிப்பட்ட சினிமாவுக்கு என்றும் உண்மையாக இருப்பேன். பல படங்கள் நடித்த நடிகர், நடிகைகளுக்கு கூட கிடைக்காத ரசிகர்களும், ஆதரவாளர்களும் எனக்கு கிடைத்திருப்பது என் அதிர்ஷ்டம். அதனை கடவுள் எனக்கு கொடுத்த பரிசாக பார்க்கிறேன். காதல் படங்கள் போல ஆக்ஷன் கதாபாத்திரங்களிலும் நடிக்க விரும்புகிறேன். காலமே எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும்” என்று பேசியுள்ளார்.