சசிகுமார், சிம்ரன், யோகி பாபு நடித்து ஹிட்டான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற படத்தை எழுதி இயக்கிய அபிஷன் ஜீவிந்த், இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தனது தோழி அகிலாவிடம், ‘வரும் அக்டோபர் மாதம் என்னை திருமணம் செய்துகொள்கிறாயா?’ என்று பகிரங்கமாக கேட்டார். உடனே அதிர்ச்சி கலந்த புன்னகையுடன் பேசி வெட்கப்பட்ட அகிலா சம்மதித்தார். அதன்படி கடந்த அக்டோபர் 31ம் தேதி அபிஷன் ஜீவிந்த், அகிலா திருமணம் நடந்தது.
தற்போது அபிஷன் ஜீவிந்த், அனஸ்வர ராஜன் ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் உருவாகிறது. இந்நிலையில் தனது மனைவியுடன் மீடியாவை சந்தித்த அபிஷன் ஜீவிந்த் கூறுகையில், ‘நாங்கள் 6ம் வகுப்பில் இருந்தே காதலித்து வந்தோம். அகிலாவுக்கு முதலில் நான்தான் ‘ஐ லவ் யூ’ சொன்னேன். இப்போது திருமணமாகி விட்டது. ஹனிமூன் செல்வது குறித்து முடிவு செய்யவில்லை.
அடுத்து நான் இயக்கும் படத்தின் ஹீரோ முடிவாகவில்லை. இப்போது நான் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ஹிட்டானால், தொடர்ந்து நடித்துக்கொண்டே படம் இயக்குவேன். ஆனால், என் இயக்கத்தில் நானே ஹீரோவாக நடிக்க மாட்டேன். மனைவி சொல்லே மந்திரம் என்பது போல், இனிமேல் என் மனைவியின் பேச்சை கேட்டு ஒழுங்காக இருப்பேன்’ என்றார்.
