Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கோவிந்தா விஷயத்தில் மனைவி திடீர் பல்டி

பாலிவுட் நடிகர் கோவிந்தாவை அவரது மனைவி சுனிதா விவாகரத்து செய்ய இருப்பதாகவும், அதற்கு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது. கடந்த 2024 டிசம்பர் 5ம் தேதி தாக்கல் செய்த மனுவில், கோவிந்தா மீது சுனிதா குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில் கோவிந்தா, சுனிதா ஆகியோரின் வழக்கறிஞர் லலித் பிந்த்ரா அளித்துள்ள விளக்கத்தில், ‘அவர்களுக்குள் எந்த வழக்கும் இல்லை. அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு விட்டது. பழைய பிரச்னையை மக்கள் கிளப்புகின்றனர். விநாயகர் சதுர்த்தியில் அவர்கள் இருவரையும் இணைந்து பார்க்க முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

விவாகரத்து பிரச்னையை சுனிதாவும் மறுத்துள்ளார். இதுதொடர்பாக உறுதிப்படுத்தாத செய்திகளை வெளியிட வேண்டாம் என்று அவரது தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. தற்போது கோவிந்தா 30 வயதான மராத்தி நடிகையுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. அதுவே கோவிந்தாவுக்கும், சுனிதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட முக்கிய காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கணவன் விஷயத்தில் மனைவி திடீர் பல்டியடித்து இருப்பதை பாலிவுட் ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.