Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நீச்சல் உடையில் நடிக்க கியாரா அத்வானி மறுப்பா?

மும்பை: யஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் பட வரிசையின் 6வது படமான ‘வார் 2’, வரும் ஆகஸ்ட் 14ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தியில் ரிலீஸ் ஆகிறது. ஆதித்யா சோப்ரா தயாரிக்க, அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹிரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்துள்ளனர். நீச்சல் உடையில் கியாரா அத்வானி தோன்றிய காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது தோற்றத்தை வடிவமைத்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா கூறுகையில், ‘நான் கியாராவுக்கு ஆடைகளை வடிவமைப்பது இதுவே முதல்முறை. அவர் நீச்சல் உடை அணிய மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. கடற்கரையில் நீச்சல் உடையில் பெண்கள் எப்படி இருப்பார்கள் என்பதை சொன்னேன். ‘மிகவும் இயல்பாக இருங்கள், முழுமையாக அனுபவித்து நடியுங்கள், பிகினி அணிந்ததால் கவர்ச்சியாக இருக்கிறேன் என்ற எண்ணத்தில் நடிக்காதீர்கள்’ என்று வலியுறுத்தினேன். அதை புரிந்துகொண்டு சுதந்திரமாக நடித்தார். அவரது இயல்பான கடின உழைப்புதான் திரையில் அவர் இவ்வளவு அழகாக தோன்றுவதற்கு முக்கிய காரணமாகும்’ என்றார்.