Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பல பெண்களுடன் தொடர்பு: கோவிந்தா மீது மனைவி பகீர் புகார்

மும்பை: சினிமா துறையில் விவாகரத்து என்பது புதிய விஷயம் அல்ல. சமீப காலத்தில் பல முன்னணி பிரபலங்களின் விவாகரத்து செய்திகள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான், ஜீ.வி.பிரகாஷ் தொடங்கி ரவி மோகன் வரை இந்த லிஸ்ட் பெரிதாக செல்கிறது. இந்நிலையில் இந்தியில் பிரபல நடிகரான கோவிந்தாவின் மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்து இருப்பதாக தகவல் பரவியுள்ளது.

61 வயதாகும் கோவிந்தாவின் மனைவி சுனிதா அஹுஜா தாக்கல் செய்த வழக்கில் தன்னை கணவர் ஏமாற்றிவிட்டார், கொடுமை படுத்துகிறார், வேறு பெண்களுடன் தொடர்பில் இருக்கிறார் என புகார் கூறி இருக்கிறார். இது பற்றி சுனிதா தற்போது யூடியூப் வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசி இருப்பதால் அது வைரல் ஆகி வருகிறது. இருப்பினும் இந்த புகார் பற்றி நடிகர் கோவிந்தா எந்த விளக்கமும் இதுவரை கொடுக்கவில்லை. இந்நிலையில் கோவிந்தாவின் வக்கீல், தற்போது சுமூக பேச்சுவார்த்தை நடக்கிறது. விவகாரத்து வழக்கு என்பது வெறும் வதந்திதான் என தெரிவித்துள்ளார்.