சென்னை: தமிழில் ‘ப.பாண்டி’, ‘ராயன்’, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ஆகிய படங்களை தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள 4வது படம், ‘இட்லி கடை’. இது தனுஷ் நடித்துள்ள 52வது படம். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. வில்லனாக அருண் விஜய் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ்,...
சென்னை: தமிழில் ‘ப.பாண்டி’, ‘ராயன்’, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ஆகிய படங்களை தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள 4வது படம், ‘இட்லி கடை’. இது தனுஷ் நடித்துள்ள 52வது படம். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. வில்லனாக அருண் விஜய் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன் நடித்துள்ளனர். வரும் அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் பங்கேற்றனர்.
அப்போது தனுஷ் உருக்கமாக பேசியதாவது: பொதுவாக ஒரு படத்துக்கு ஹீரோவின் பெயரை டைட்டிலாக சூட்டுவார்கள். என் சிறுவயது அனுபவங்களை வைத்தும், நான் பார்த்த நிஜ மனிதர்களை வைத்தும் ஒரு படம் இயக்க ஆசைப்பட்டேன். அப்படி உருவானதுதான் ‘இட்லி கடை’. அப்போது எங்கள் ஊரில் ஒரு இட்லி கடை இருக்கும். எப்படியாவது இட்லி சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவேன். ஆனால், என் கையில் காசு இருக்காது. எனவே நானும், என் அக்காவும் விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து, வயலுக்கு சென்று பூ பறிப்போம். இரண்டரை மணி நேரம் பூ பறித்த பிறகு ஆளுக்கு இரண்டு ரூபாய் கிடைக்கும். பிறகு தோட்டத்திலுள்ள குட்டையில் ஆசை தீர குளிப்போம். அதற்கு பிறகு கடைக்கு சென்று, இரண்டு ரூபாய்க்கு 4 இட்லிகள் வாங்கி சாப்பிடுவோம். உழைத்து சாப்பிடும்போது கிடைத்த சுவையும், நிம்மதியும், சந்தோஷமும் ஸ்டார் ஓட்டல்களில் கூட எனக்கு கிடைக்கவில்லை.