Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரைட் விமர்சனம்...

பிரதமர் வருகையையொட்டி, தனது பாதுகாப்பு குழுவினருடன் இன்ஸ்பெக்டர் நட்டி வெளியே செல்கிறார். அப்போது ஒரு ‘பாம்’ வைத்து போலீஸ் ஸ்டேஷனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் மர்ம நபரால் சில விபரீதங்கள் ஏற்படுகிறது. அந்த மர்ம நபரின் கோரிக்கைகள் என்ன என்று விசாரிக்கும்போது, அதிர்ச்சிகரமான பல தகவல்கள் கிடைக்கிறது. அது என்ன என்பது மீதி கதை.

இன்ஸ்பெக்டராக சுறுசுறுப்புடன் நடித்துள்ள நட்டி, இறுதியில் கண்கலங்க வைக்கிறார். மகன் உயிருடன் இருக்கிறானா என்று தெரியாமல் அருண் பாண்டியன் தவிப்பது உருக்கம். சப்-இன்ஸ்பெக்டர் அக்‌ஷரா ரெட்டி, கான்ஸ்டபிள் மூணாறு ரவி, நீதிபதி வினோதினி வைத்தியநாதன், பழைய ஜோக் தங்கதுரை மற்றும் இளம் காதல் ஜோடி ஆதித்யா சிவகுமார், யுவினா பார்த்தவி உள்பட அனைவரும் மிக இயல்பாக நடித்துள்ளனர்.

முழுநீள போலீஸ் ஸ்டேஷன் ஸ்டோரிக்கு ஏற்ப ஒளிப்பதிவாளர் எம்.பத்மேஷ் நன்கு உழைத்துள்ளார். அவருக்கு எடிட்டர் நாகூரான் ராமச்சந்திரன், ஆர்ட் டைரக்டர் தாமு உதவி செய்துள்ளனர். குணா பாலசுப்ரமணியன் பின்னணி இசை குறிப்பிடத்தக்கது. போலீஸ் ஸ்டேஷனில் குண்டு வைத்தது யாராக இருக்கும் என்ற சஸ்பென்சை கடைசிவரை நீட்டித்துள்ள இயக்குனர் சுப்ரமணியன் ரமேஷ்குமார், அரசியல் புள்ளிகளை காவல்துறையாலும் கட்டுப்படுத்த முடியாது என்று சொல்லியிருக் கிறார். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.