Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தவறு செய்துவிட்டதாக தயாரிப்பாளர் ஒப்புதல்

ஷங்கர் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் பல்வேறு மொழிகளில் திரைக்கு வந்த ‘கேம் சேஞ்சர்’ என்ற படம் தோல்வி அடைந்தது. இதில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, தெலுங்கு காந்த் நடித்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ அளித்துள்ள பேட்டியில், ‘முன்னணி இயக்குனர்களுடன் பிரமாண்டமான பட்ஜெட்டில் படத்தை உருவாக்கும்போது பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம். எனக்கு மட்டுமல்ல, கிட்டத்தட்ட எல்லோருக்குமே அதுபோன்ற பிரச்னை ஏற்படத்தான் செய்யும். நான் தயாரித்த ‘கேம் சேஞ்சர்’ படத்தின் எடிட்டர், படத்தின் நீளம் ஒருகட்டத்தில் நான்கரை மணி நேரமாக இருந்ததாக சொன்னது உண்மைதான்.

இதுபோன்ற எதிர்பாராத பல விஷயங்கள், முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றும்போது கண்டிப்பாக நடக்கும். இத்தனை ஆண்டு கால என் திரையுலக வாழ்க்கையில், ஷங்கர் போன்ற முன்னணி இயக்குனர்களுடன் இதற்கு முன்பு நான் பணியாற்றியது இல்லை. ‘கேம் சேஞ்சர்’ படத்தை தயாரித்தது நான் எடுத்த தவறான முடிவு. ஒப்பந்தத்தில் எனது கருத்துகளை தெளிவாக குறிப்பிட்டு, பிறகு நான் படம் தயாரிக்க தொடங்கியிருக்க வேண்டும். ஏனோ நான் அப்படி செய்யவில்லை. அது என் தவறுதான்’ என்று சொல்லியிருக்கிறார்.