Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

யஷ், கியாரா நடிக்கும் டாக்ஸிக் 2026 மார்ச் 19ல் ரிலீஸ்

பெங்களூரு: கேஜிஎஃப் 1’, ‘கேஜிஎஃப் 2’ ஆகிய படங்களின் மூலமாக பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ள யஷ், தற்போது நடிகை கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடித்து வரும் பான் வேர்ல்ட் படம், ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’. இது வரும் 2026 மார்ச் 19ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. ஒரே நேரத்தில் கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வரும் முதல் இந்திய திரைப்படமான இது, பிறகு இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. இது யஷ் நடிக்கும் 19வது படமாகும். வெங்கட் கே.நாராயணா, யஷ் இணைந்து கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ், மான்ஸ்டர் மைன்ட் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கின்றனர். கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி நடிக்கின்றனர்.