Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

யஷ் பாதுகாவலர் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பெங்களூரு: நடிகர் யஷ் ‘கேஜிஎப்’ படத்தின் மூலமாக இந்திய அளவில் பேசப்படும் நடிகராக மாறிவிட்டார். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் கிடைத்திருக்கிறது. அடுத்து அவர் ‘ராமாயணம்’ படத்தில் ராவணன் ஆக நடிக்கிறார். மேலும் அவர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் ‘டாக்சிக்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். யஷ் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அவரது பாதுகாவலராக இருந்து வரும் ஸ்ரீனிவாஸ் அவருடனே இருப்பார்.

அஜானுபாகுவ தோற்றம் கொண்ட ஸ்ரீனிவாஸ், மிஸ்டர் பெங்களூருவாக பட்டம் பெற்றவர். கடந்த 4 ஆண்டுகளாக யஷ்ஷுக்கு பாதுகாவலாரக இவர் இருந்து வருகிறார். இவரது சம்பளம் பற்றிய விவரம் தான் தற்போது எல்லோருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஸ்ரீநிவாஸுக்கு மாத சம்பளமாக 10 லட்சம் ரூபாய்க்கு மேல் யஷ் கொடுக்கிறாராம். இவ்வளவு சம்பளம் வாங்கும் அவர் சொகுசு கார், பைக் என இன்ஸ்டாவில் வெளியிட்டு வரும் போட்டோக்களும் இணையத்தில் வைரல் ஆகின்றன.