Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

46 வருடங்களுக்கு பிறகு ரஜினி - கமல் இணையும் படம்

சென்னை: ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘கூலி’ படத்துக்குப் பிறகு ‘கைதி 2’ படத்தினை இயக்கவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் பல பேட்டிகளில் கூறியிருந்தார். ஆனால், இப்போது அதில் மாற்றம் இருக்கும் என தெரிகிறது. அப்படத்துக்கு முன்னதாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தினை இயக்க முடிவு செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதனை ரெட் ஜெயண்ட் நிறுவனம் மற்றும் ராஜ்கமல் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளன.

ரஜினி, கமல், லோகேஷ் கனகராஜ் இணையும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும், இதன் வெளியீடு ஆண்டு இறுதிக்கு திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடைசியாக 1979ல் அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில்தான் இருவரும் சேர்ந்து நடித்தனர். 46 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.