Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அண்ணன் உடையான்... தம்பியின் காதலை சேர்த்து வைத்த யோகி பாபு

சென்னை: தமிழ் சினிமாவில் காமெடியனாகவும், கதாநாயகனாகவும் கலக்கி வருபவர் நடிகர் யோகி பாபு. இவரது உடன் பிறந்த தம்பி விஜயன் சினிமா இயக்குநராகும் ஆசையில், உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டு இருக்கிறார். இந்நிலையில் விஜயனின் திருமணம் கடந்த வாரம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணம் தொடர்பாக யோகி பாபுவின் நட்பு வட்டத்திலிருந்து கிடைத்த தகவலில், விஜயனுக்கு சில வருடங்களுக்கு முன் மைசூரை சேர்ந்த பெண் ஒருவருடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாகவும், ஆனால், பெண் படுகர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பெண் வீட்டார் சம்மதிக்க தயங்கியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், காதலில் தனது தம்பி உறுதியாக இருந்ததால், யோகிபாபுவே நேரடியாக பெண் வீட்டாரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பிறகு மைசூருக்கு சென்று அங்கு சில நாட்கள் தங்கியிருந்து அவர்களது சம்மதத்தை வாங்கினாராம்.

சமீபத்தில் இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது.யோகி பாபுவின் சொந்த ஊரான செய்யாறில் எளிமையாக நடந்த இந்த திருமணத்தில், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருக்கமான சிலர் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.