Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஜீ5 ஓடிடியில் வேடுவன் வெப்தொடர்

சென்னை: பவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேடுவன்’ வெப் தொடர் ஜீ5 ஓடிடியில் வெளியாக உள்ளது. தமிழில் மண்டேலா, குருதி ஆட்டம், கூலி, கைதி, லவ்வர் போன்ற படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர் கண்ணா ரவி. இவர் தற்போது பவன் இயக்கத்தில் ‘வேடுவன்’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.

இதில் சஞ்சீவ் வெங்கட், ஸ்ராவினிதா, ஸ்ரீ காந்த், ஐஸ்வர்யா ரகுபதி, வினுஷா தேவி, லாவண்யா, ரேகா நாயர், பார்வதி, ஜீவா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜீ 5 நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘வேடுவன்’ வெப் தொடர் வித்தியசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. வருகிற அக்டோபர் 10ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.