Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வாய்ப்புகளை உருவாக்கி ஜெயிக்க வேண்டும்: தேவ் ராம்நாத்

சென்னை, ‘வாயை மூடி பேசவும்’, ‘ஒரு நாள் கூத்து’, ‘வெள்ளைப் பூக்கள்’, ‘மமகிகி’, ‘போர்’, ‘பேச்சி’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தவர், தேவ் ராம்நாத். இந்நிலையில், சொந்தப்படம் தயாரித்து நடிக்க திட்டமிட்டுள்ள தேவ் ராம்நாத், அதுபற்றி கூறியதாவது: எனக்குப் பொருத்தமான கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கிறேன். மலையாளத்திலும் நடிக்க வாய்ப்பு வருகிறது. தமிழில் ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதியும் கேரக்டரில் நடிக்க விரும்புகிறேன். அதற்காக சொந்த நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். இந்நிறுவனம் சார்பில் பல விளம்பரப் படங்களை தயாரித்துள்ளேன்.

‘பேச்சி’ படம் கொடுத்த திருப்புமுனையின் காரணமாக அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளேன். நான் தயாரிக்கும் படத்தின் கதை வித்தியாசமாக இருக்கும். அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். ‘பேச்சி’ படத்தின் 2ம் பாகத்தில் நடிப்பது பற்றி அவர்கள்தான் சொல்ல வேண்டும். மணிரத்னம், வெற்றிமாறன், சுதா கொங்கரா போன்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க காத்திருக்கிறேன். கதையின் திருப்புமுனைக்கு உதவும் கேரக்டர் எதுவாக இருந்தாலும் நடிப்பேன். வாய்ப்புக்காக காத்திருப்பதை விட, நல்ல வாய்ப்புகளை நாமே உருவாக்கி ஜெயிக்க வேண்டும். அதன்மூலம் மற்ற திறமையாளர்களையும் இந்த உலகிற்கு அடையாளம் காட்ட வேண்டும் என்பதே என் நோக்கம்.