Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

துர்கா டீச்சர்

சட்டத்துக்கு விரோதமாக போதைப் பொருட்கள் கடத்தி புழக்கத்தில் விடுகிறது ஒரு கும்பல். இதையடுத்து போதைக்கு அடிமையான இளைஞர்களையும், மாணவர்களையும் மீட்டு நல்வழிப்படுத்தும் ஒரு ஆசிரியையின் கதையுடன் உருவாகியுள்ள படம், ‘ துர்கா டீச்சர்’. மாந்துருத்தி மாடன் தம்புரான் பிலிம்ஸ் சார்பில் வி.ஆர்.விஜயலட்சுமி கதை எழுதி தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இணை இயக்குனராகப் பணியாற்றிய விஜயவாசன் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

கதையின் நாயகியாக ஷாலு நடிக்க, முக்கிய வேடங்களில் சூரிய நாராயணன், உமர், கலா, முத்துலட்சுமி, சூரிய சுப்பிரமணியன் நடித்துள்ளனர். குமார் ஒளிப்பதிவு செய்ய, ஆதிஷ் பின்னணி இசை அமைத்துள்ளார். குருவாயூர், சாவக்காடு, வையம்பட்டி, பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. பாடல்கள் மற்றும் சண்டைக் காட்சிகள் இல்லை. பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.