Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஈழத் தமிழ் படத்துக்கு இளையராஜா இசை

சென்னை: ஈழத் தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக, இளையராஜா முழுநீள திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். ஓசை பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் பெயர் ‘அந்தோனி’. இந்த திரைப்படம் ஈழ மக்களின் வாழ்வியலையும், குறிப்பாக புலம்பெயர் மக்களின் உணர்வுகளையும் ஆழமாகப் பதிவு செய்யும் ஒரு சமூகத் திரைப்படம் எனத் தெரிகிறது. இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில், ஈழத்தைச் சேர்ந்த பிரபல நடிகர் கயல் வின்சன்ட் மற்றும் இந்திய நடிகை டிஜே. பானு ஆகியோர் நடித்துள்ளனர். இது இளையராஜாவின் 1524வது படமாகும். சுகிர்தன் கிறிஸ்துராஜா, ஜெனோசன் ராஜேஸ்வர் இயக்கியுள்ளனர். கலைவளரி சக இரமணா, சுகந்தினி ரமணதாஸ் தயாரிக்கின்றனர். மண் சார்ந்த சினிமாவை எடுத்துக்காட்டுகின்ற வகையில் அந்தோனி படம் அமையும் என படக்குழு தெரிவித்துள்ளது.