Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஸ்த்ரீ 2வில் தமன்னாவின் கவர்ச்சி ஆட்டம்

மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ‘காவலா’ என்ற பாடலுக்கு தமன்னா கிளாமர் டான்ஸ் ஆடிய நிலையில் அதேபோல் கிளாமர் டான்ஸ் ஆடிய தமன்னாவின் பாடல் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த பாடலின் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சமீபத்தில் இந்த பாடலை பார்த்த ரசிகர்கள், தமன்னா கவர்ச்சி விருந்து படைத்திருக்கிறார் என அவருக்கு புகழாரம் சூட்டி வருகிறார்கள்.

அதே சமயம், சிலர், இது தமன்னாவா? ஏன் இப்படி கவர்ச்சி கோதாவில் இறங்கிவிட்டார் என கேள்விகளும் எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி பாலிவுட் திரையுலகில் வெளியாக இருக்கும் ‘ஸ்த்ரீ 2’ என்ற திரைப்படத்தில் நடிகை தமன்னா கிளாமர் டான்ஸ் ஆடி உள்ள நிலையில் அந்த பாடலின் வீடியோவை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் பாடலில் தமன்னா, மற்ற கவர்ச்சி ஹீரோயின்களை விட இருமடங்கு கிளாமராக இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த படத்தில் தமன்னாவின் பாடல் இடம் பெற்றுள்ளதால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் இந்த படத்தில் தமன்னா மட்டுமின்றி அக்சய்குமார், வருண் தவான் உள்ளிட்டோரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஸ்த்ரீ 2’ படத்தில் ஷ்ரத்தா கபூர், ராஜ்குமார் ராவ் ,பங்கஜ் திரிபாதி, அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.