சென்னை: ஆத்வி சேஷ் நடிப்பில் உருவாகும் பான் இந்தியா ஆக்ஷன் படமான ‘டகோயிட்: எ லவ் ஸடோரி’ என்ற படத்தில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன், அடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘சலார் 2: சவுரியாங்க பர்வம்’ என்ற பான் இந்தியா படத்தில் நடிக்கிறார். அடுத்து ஆங்கிலத்திலும், தமிழிலும் உருவாகும் ‘சென்னை ஸ்டோரி’ என்ற...
சென்னை: ஆத்வி சேஷ் நடிப்பில் உருவாகும் பான் இந்தியா ஆக்ஷன் படமான ‘டகோயிட்: எ லவ் ஸடோரி’ என்ற படத்தில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன், அடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘சலார் 2: சவுரியாங்க பர்வம்’ என்ற பான் இந்தியா படத்தில் நடிக்கிறார். அடுத்து ஆங்கிலத்திலும், தமிழிலும் உருவாகும் ‘சென்னை ஸ்டோரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தந்தையர் தினத்தன்று ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டியில், கமல்ஹாசனிடம் இருந்து திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற ஆர்வத்தைப் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
ஆனால், இப்போது படம் இயக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று சொன்ன அவரிடம், கமல்ஹாசன் வாழ்க்கை பற்றிய பயோபிக்கை இயக்குவீர்களா என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், ‘அப்பாவின் வாழ்க்கைச் சம்பவங்களைப் பற்றி நான் படமாக்கி இயக்கினால், அது தற்சார்பாக இருக்கும். ஆனால், அவரது பயோபிக்கை சிறந்த முறையில் படமாக்கக்கூடிய திறமையான பல இயக்குனர்கள் நம்மிடம் இருக்கின்றனர்’ என்றார்.