Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஆர்ஜே பாலாஜி நடிக்கும் ஹேப்பி எண்டிங்

சென்னை: ‘குட் நைட்’, ‘லவ்வர்’ ஆகிய படங்களை தொடர்ந்து மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான், யுவராஜ் கணேசன் இணைந்து தயாரிக்கும் படம், ‘ஹேப்பி எண்டிங்’. இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. அம்மாமுத்து சூர்யா இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் ரொமான்டிக் காமெடி படமாக இது உருவாகிறது.

ஆண், பெண் உறவுகளை வழக்கமான மரபிலிருந்து மாறுபட்டு, இன்றைய உலகின் உறவுச்சிக்கலை வேறொரு கோணத்தில் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது. இந்த டீசர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பெண்களின் பலவிதமான எதிர்பார்ப்புகளில் சிக்கி அடி வாங்கும் ஒஐ இளைஞனை, புதுமையான ஐடியாவில், அசத்தலாக காட்சிப்படுத்தி இருக்கும் டீசரை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். ஷான் ரோல்டன் இசை அமைக்க, தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.