Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நேரில் சென்று உதவி செய்யும் ராகவா லாரன்ஸ்

சென்னை: வரும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் பன்மொழிப் படம், ‘சந்திரமுகி 2’. இதில் நடித்துள்ள ராகவா லாரன்ஸ், கஷ்டப்படுபவர் களுக்கு நேரில் சென்று உதவுவேன் என்று அறிவித்திருந்தார். அதை நடைமுறைப்படுத்தும் விதமாக, பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகர், கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சிலரது குழந்தை களின் படிப்புச் செலவுக்கான தொகையை, சம்பந்தப் பட்ட நபர்களுடைய வீட்டுக்கு நேரில் சென்று வழங்கினார். அவர் கூறுகையில், ‘இவர்களுக்கு உதவும் சேவகனாக என்னைப் படைத்த கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். இந்த நேரடி பயணம் தொடரும்’ என்றார்.