சென்னை: தமிழில் வெளியான ‘சுப்ரமணியபுரம்’, ‘ஈசன்’ ஆகிய படங்களை இயக்கி நடித்த சசிகுமார், தற்போது நடிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார். சூரி நடித்து ஹிட்டான ‘கருடன்’ படம், சசிகுமார் நடித்த 25வது படமாகும். இந்நிலையில், ‘உடன்பிறப்பே’ படத்துக்குப் பிறகு மீண்டும் இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம், ‘நந்தன்’. நரேன், சிருஷ்டி...
சென்னை: தமிழில் வெளியான ‘சுப்ரமணியபுரம்’, ‘ஈசன்’ ஆகிய படங்களை இயக்கி நடித்த சசிகுமார், தற்போது நடிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார். சூரி நடித்து ஹிட்டான ‘கருடன்’ படம், சசிகுமார் நடித்த 25வது படமாகும். இந்நிலையில், ‘உடன்பிறப்பே’ படத்துக்குப் பிறகு மீண்டும் இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம், ‘நந்தன்’.
நரேன், சிருஷ்டி டாங்கே நடித்த ‘கத்துக்குட்டி’, சமுத்திரக்கனியுடன் ஜோதிகா, சசிகுமார் நடித்த ‘உடன்பிறப்பே’ ஆகிய படங்களை எழுதி இயக்கியிருந்த இரா.சரவணன், ‘நந்தன்’ படத்தை எழுதி இயக்கியுள்ளார். இரா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். வித்தியாசமான கெட்டப்பில் சசிகுமார் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ருதி பெரியசாமி, சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல் நடித்துள்ளனர். இப்படம் வரும் செப்டம்பர் 20ம் தேதி திரைக்கு வருகிறது.