Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தமிழை மதிக்கிறேன்: ‘புஷ்பா 2’ விழாவில் அல்லு அர்ஜூன் நெகிழ்ச்சி

சென்னை: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, பஹத் பாசில் நடித்துள்ள ‘புஷ்பா 2: தி ரூல்’ என்ற பான் இந்தியா படம், வரும் டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி சென்னையில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் பங்கேற்ற அல்லு அர்ஜூன் பேசியதாவது: உங்கள் வாழ்க்கையில் முதல் 20 வருடங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அப்படித்தான் வாழ்க்கை முழுவதும் இருப்பீர்கள் என்று உளவியல் ரீதியாக சொல்வார்கள். அப்படி பார்த்தால் முதல் 20 வருடம் எனது கல்வியை இங்குதான் பெற்றேன். எங்கே போனாலும் நான் சென்னை தி.நகர்காரன்தான். இப்படத்துக்காக நான் 3 வருடங்கள் கடுமையாக உழைத்திருக்கிறேன். எனது ஊரில் எனது படத்துக்கு இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி வேண்டும் என்று விரும்பினேன். இன்றைக்கு அது நடந்துள்ளது. இப்போது நான் தமிழில்தான் பேசுவேன். இந்த மண்ணுக்கு நான் கொடுக்கும் மரியாதை அது. தமிழை மதிக்கிறேன். இவ்வாறு அல்லு அர்ஜுன் பேசினார்.