Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பவதாரிணியின் இசையை வெளியிட்ட இளையராஜா

சென்னை: பி.ஜி.பிக்சர்ஸ் சார்பில் ஜலீல் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘புயலில் ஒரு தோணி’. புதுமுகங்கள் விஷ்ணுபிரகாஷ், அர்ச்சனாசிங், இளவரசு, ராதாரவி, நமோ நாராயணன் மற்றும் பலர் நடிக்கும் இந்தப்படத்தை ஈசன் இயக்கியிருக்கிறார். மறைந்த இசையமைப்பாளர் பவதாரிணி இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவர் இசையமைப்பில் உருவான கடைசி படமும் இதுதான். பவதாரணியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பிறந்த நாள், நினைவு நாள் இரண்டும் ஒரு சேர அனுஷ்டிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ‘புயலில் ஒரு தோணி’ படத்தின் இசையை இசைஞானி இளையராஜா வெளியிட்டார்.

மேலும் இளையராஜா பவதாரிணி பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன் பவதாரிணி இதுவரை பாடிய பாடல்களை தனது இசைக்குழு மூலமாக இசைக்க செய்தார். இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் இயக்குனருமான கங்கை அமரன், இயக்குனர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, கவிஞர் சினேகன், தயாரிப்பாளர் டி.சிவா, ஜெ .எம். பஷீர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பவதாரிணிக்கு தங்களது நினைவஞ்சலியை செலுத்தினர். கவிஞர் சினேகன் பேசும்போது, ‘‘இசைஞானி இளையராஜா எதையுமே பெரிதாக வெளிகாட்டி கொள்ள மாட்டார். என்றாலும் பவதாரணி மீது அந்த ஆகாயம் அளவிற்கு அன்பை மனதிற்குள் வைத்திருப்பார்’ என்றார்.