Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நாக சைதன்யாவின் 2வது திருமணத்தால் பொறாமையா? சமந்தா ஓபன் டாக்

சென்னை: நாக சைதன்யா 2வது திருமணம் செய்துகொண்டது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் சமந்தாவிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதை பார்த்து பொறாமையாக இருக்கிறதா என்றும் கேட்டிருக்கிறார்கள். ‘‘அய்யய்யோ இல்லை. நான் எப்போதும் விலகி இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது பொறாமை தான். என்னிடம் அது இருப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். பொறாமை தான் எல்லா மோசமான விஷயங்களுக்கும் வேர். மற்ற எல்லாம் பரவாயில்லை, ஆனால் பொறாமை என்பதற்கு மட்டும் என்னிடம் இடமில்லை” என சமந்தா கூறி இருக்கிறார்.

நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என கேட்டபோது, ‘‘ஒரு பெண் திருமணமாகி குழந்தைகள் பெற்று இருந்தால் தான் முழுமையானதாக சமூகத்தில் பார்கிறார்கள். என் வயதில் இருப்பவர்கள் அதை செய்திருக்கவிலை என்றால் நான் சோகமான மற்றும் தனிமையான வாழ்க்கையை வாழ்வதாக எல்லோரும் நினைக்கிறார்கள். அது தவறு. உண்மையும் இல்லை. ஒரு பெண் என்பவருக்கு விதிக்கப்படும் தரநிலைகளை அவள் பூர்த்தி செய்யவில்லை என்றாலும் அவள் மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் இருக்கிறாள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்\” என்றார் சமந்தா.