Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஜெயில் பின்னணியில் உருவாகும் சொர்க்க வாசல்

சென்னை: ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடிக்கும் ஆக்ஷன்-டிராமா திரைப்படமாக ‘சொர்க்கவாசல்’ உருவாகி வருகிறது. ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் சார்பில் சித்தார்த் ராவ் மற்றும் பல்லவி சிங் தயாரிக்கும் இப்படத்தை பா ரஞ்சித்திடம் இணை இயக்குநராக பணியாற்றிய சித்தார்த் விஸ்வநாத் இயக்குகிறார். இயக்குனர் செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமாகிய நட்டி, மலையாள திரையுலகை சேர்ந்த பிரபலங்களான சானியா ஐயப்பன், ஷரஃப் உதீன் மற்றும் ஹக்கீம் ஷா, இயக்குனர் பாலாஜி சக்திவேல், கருணாஸ், இசையமைப்பாளர் அனிருத்தின் தந்தை ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், சாமுவேல் ராபின்சன் மற்றும் மெளரிஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். சிறையை பிரதான கதைக்களமாக கொண்டு உருவாகும் இந்தப் படம், சிறைச் சுவர்களுக்கு உள்ளே இருப்பவர்களின் கடுமையான வாழ்வியல் பயணத்திற்கு அழைத்துச் செல்லும் என்று இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் தெரிவித்தார். மம்மூட்டியின் ‘பிரம்மயுகம்’ படத்திற்கு இசையமைத்த கிறிஸ்டோ சேவியர் தமிழில் அறிமுகம் ஆகிறார். ஒளிப்பதிவை பிரின்ஸ் ஆண்டர்சன் கவனிக்க, செல்வா ஆர் கே படத்தொகுப்பை கையாளுகிறார்.