Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜான்வி

பிரான்ஸ் நாட்டில் நடக்கும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் பிளாஸ்டிக் பற்றி ஜான்வி கபூர் பேசியிருப்பது, ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களின் பாராட்டுகளை குவித்து வருகிறது. இஷான் கட்டாரும், ஜான்வி கபூரும் சேர்ந்து நடித்த ‘ஹோம்பவுண்ட்’ என்ற இந்தி படம் திரையிடப்பட்டது. படம் முடிந்தவுடன் அனைவரும் எழுந்து நின்று 9 நிமிடங்கள் கைதட்டி பாராட்டினர். அதை பார்த்த படக்குழுவினர் கண்கலங்கினர். இந்நிலையில் ஜான்வி கபூர் பேசுகையில், ‘நான் மிகவும் அழகாக இருக்கிறேன். சாப்பிடுவதற்காக காத்திருக்கிறேன். பசிக்கிறது. என் தோற்றத்தை பார்த்துவிட்டு, ‘பிளாஸ்டிக்’ என்று சொல்வார்கள்.

ஆனால், அவர்களை யார் கண்டுகொள்வது?’ என்றார். தன்னை பிளாஸ்டிக் என்று கடுமையாக விமர்சிப்பவர்களை ஜான்வி கபூர் அமைதியாக கையாண்டதை பார்த்து மேக்கப் டீம் சிரித்தது. தனது அம்மா தேவி அளவுக்கு ஜான்வி கபூர் அழகாக இல்லை என்று ஆரம்பத்தில் விமர்சிக்கப்பட்டது. இதையடுத்து பிளாஸ்டிக் சர்ஜரி மூலமாக தனது முகம் மற்றும் உடலழகை மாற்றி அழகாக மாறியிருக்கிறார் என்று ஜான்வி கபூரை சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கின்றனர். தேவி போல் பெரிய கண்களுடன் அழகாக இருக்கும் ஜான்வி கபூரை பிளாஸ்டிக் என்று கிண்டல் செய்யும் நிலையில், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜான்வி கபூர் அதிரடியாக பேசியுள்ளார்.

தேவியின் இளைய மகள் குஷி கபூரும் பிளாஸ்டிக் சர்ஜரி மூலமாக அழகானார் என்று சொல்லப்பட்டது. இதற்கு துணிச்சலுடன் பதிலளித்த அவர், ‘என் உதடுகளை மட்டுமல்ல, மூக்கையும் கூட அழகாக மாற்றியிருக்கிறேன்’ என்று வெளிப்படையாக சொன்னார். இது ரசிகர்களை வியக்க வைத்தது. ‘நடிகைகள் அனைவரும் பிறக்கும்போதே இந்த அளவுக்கு அழகாக இருப்பது இல்லை. அதனால், பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது சாதாரணமான ஒரு விஷயம்’ என்று குஷி கபூர் ஜாலியாக பேசினார். இந்நிலையில், ஜான்வி கபூர் அணிந்த பேக்லஸ் கவுனும், வெள்ளை நிற சேலையும் வைரலாகி விட்டது.

அவர் அணிந்தது சேலைதானா என்று பலர் சந்தேகத்துடன் கேட்டனர். அது சேலைதான். ஜான்வி கபூரின் ரசனைக்கு ஏற்ப மாடர்னாக வடிமைத்தவர், பாலிவுட் நடிகர் அனில் கபூரின் இளைய மகள் ரியா கபூர். தனது சித்தப்பா மகள் வடிவமைத்த சேலையில் ஜான்வி கபூர் அழகாக இருந்தார்.