Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஜேசன் சஞ்​சய்​ படத்தில் கேத்​தரின் தெரசா நடனம்

சென்னை: விஜய்​, சங்கீதாவின் மகன் ஜேசன் சஞ்​சய் இயக்​குன​ராக அறிமுக​மாகும் படம், ‘சிக்​மா’. ஆக் ஷன் கதை கொண்ட இதில் சந்​தீப் கிஷன் ஹீரோவாக நடிக்​கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்​க, தமன் இசை அமைக்​கிறார். தமிழ், தெலுங்​கில் உருவாகும் இப்படத்தில், சிறப்பு பாடல் காட்சி ஒன்றில் கேத்​தரின் தெரசா நடனமாடி இருக்கிறார். இப்பாடல் காட்சியில் ஜேசன் சஞ்​சய் நடித்​துள்​ள​தாக கூறப்படுகிறது.

முக்கிய வேடங்களில் ஃபரியா அப்துல்லா, ராஜூ சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் நடித்துள்ளனர். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜேசன் சஞ்சய் கூறுகையில், ‘பயமே இல்லாத, மிகவும் சுதந்திரமான, இந்த சமூகத்தால் புரிந்துகொள்ளப்படாத ஒருவன், தனது இலக்குகளை நோக்கி நகர்வதை படம் பேசுகிறது. வேட்டை, கொள்ளை, காமெடி ஆகிய அம்சங்கள் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்’ என்றார்.