Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

லியோ டிரைலர் எப்போது?.. இணையதளத்தில் கசிந்த தகவல்

சென்னை: நடிகர் விஜயின் லியோ படத்தின் டிரைலரை அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகும் படம், ‘லியோ’. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இதில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். வரும் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தற்போது லியோ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இதனிடையே அதிக டிக்கெட்டுகள் கோரிக்கை மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, ‘லியோ’ இசை வெளியீட்டு விழாவை நடத்தப்போவதில்லை என பட தயாரிப்பு நிறுவனம் செவன் க்ரீன் ஸ்டூடியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் லியோ படத்தின் டிரைலரை அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.