சென்னை: மலையாளத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்த துல்கர் சல்மான், தற்போது பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார். கடந்த 12 வருடங்களாக திரையுலகில் வெற்றிகரமாகப் பணியாற்றி வரும் அவர், ‘லக்கி பாஸ்கர்’ படத்தில் வங்கி காசாளர் வேடத்தில் நடிக்கிறார். வெங்கி அட்லூரி இயக்குகிறார். இந்தப் படத்தின் கதை 1980களில் பம்பாய் (மும்பை) மாநகரின் பின்னணியில்...
சென்னை: மலையாளத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்த துல்கர் சல்மான், தற்போது பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார். கடந்த 12 வருடங்களாக திரையுலகில் வெற்றிகரமாகப் பணியாற்றி வரும் அவர், ‘லக்கி பாஸ்கர்’ படத்தில் வங்கி காசாளர் வேடத்தில் நடிக்கிறார். வெங்கி அட்லூரி இயக்குகிறார். இந்தப் படத்தின் கதை 1980களில் பம்பாய் (மும்பை) மாநகரின் பின்னணியில் நடக்கிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது. ஒரு எளிய மனிதனின் ஒழுங்கற்ற லட்சியம், ஆபத்து மற்றும் கடும் சூழ்நிலையில் இருந்து தப்பித்தல் ஆகியவையும் கதையில் இடம்பெறுகிறது. 1980களில் மும்பையில் நிதி நெருக்கடி ஏற்பட்ட காலத்தில், ஒரு காசாளரின் வாழ்க்கை மிகப்பெரும் கொந்தளிப்பில் நடக்கிறது.
பிறகு என்னென்ன நடக்கிறது என்பதை படக்குழு சஸ்பென்சாக வைத்திருக்கிறது. துல்கர் சல்மான் ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்க, ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில், சாய் சவுஜன்யாவுடன் இணைந்து சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் சூர்யதேவரா நாகவம்சி தயாரிக்கிறார். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார். தெலுங்கு, மலையாளம், தமிழ், இந்தி ஆகிய 4 மொழிகளில் இப்படம் திரைக்கு வருகிறது.