Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மம்மூட்டி நடிக்கும் டொமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ்

திருவனந்தபுரம்: தமிழைத் தொடர்ந்து சில மலையாளப் படங்களில் நடித்துள்ள கவுதம் வாசுதேவ் மேனன், தற்போது மலையாளத்தில் இயக்குனராக அறிமுகமாகும் படத்தை மம்மூட்டி தயாரித்து நடிக்கிறார். ஹீரோயினாக நயன்தாரா நடிப்பார் என்று தெரிகிறது. முக்கிய வேடங்களில் கோகுல் சுரேஷ், லீனா நடிக்கின்றனர். இப்படத்துக்கு ‘டொமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மம்மூட்டியின் 73வது பிறந்தநாளில் பர்ஸ்ட் லுக் வெளியானது.

இரவு உடையுடன், பெண்கள் பயன்படுத்தும் பர்சை கையில் வைத்து போஸ் கொடுத்த மம்மூட்டியை ஒரு பூனை பின்தொடர்கிறது. அந்த அறையிலுள்ள பொருட்கள் சிதறிக்கிடக்கிறது. ஒரு பெண்ணின் ஹேண்ட் பேக் திறந்து கிடக்கிறது. பின்னணியில் சில நபர்களின் போட்டோக்கள் மார்க் செய்யப்பட்டுள்ளன. ஹாலிவுட் படத்தின் போஸ்டர்கள் இடம்பெற்றுள்ளன.

அதில் ‘ஜேம்ஸ்பாண்ட் 007’ என்ற படத்தின் போஸ்டரும் இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, மம்மூட்டி ஏற்றிருப்பது துப்பறியும் நிபுணர் வேடம் என்றும், முழு படமும் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக இருக்கவாய்ப்பிருக்கிறது என்றும் தெரிகிறது. மம்மூட்டியின் இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.