Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மிஸ்டர்.X படத்தில் இணைந்த மஞ்சு வாரியர்

எப்.ஜ.ஆர் பட இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய படம் தயாரிப்பதை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். நடிகர்கள் ஆர்யா, கவுதம் கார்த்திக் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கும் இப்படத்திற்கு மிஸ்டர்.X என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் இணைந்துள்ளார்.

இதற்கு முன்பு இவர் அசுரன், துணிவு போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை துவங்குவதற்கான பூஜை சென்னையில் நடைபெறுகிறது. அதிரடியான ஆக்ஷன் ஸ்பை திரில்லராக உருவாகும் இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. மொழிகளில் இருந்தும் முக்கிய நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.