Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

‘லக்கி பாஸ்கர் 2’ல் மீனாட்சி புறக்கணிப்பு

தெலுங்கு முன்னணி இயக்குனர் வெங்கி அட்லுரி, தனுஷ் நடித்த ‘வாத்தி’, ‘சார்’ ஆகிய படங்களை தொடர்ந்து துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படத்தை இயக்கினார். தற்போது ‘சூர்யா 46’ படத்தை இயக்கி வருகிறார். ‘லக்கி பாஸ்கர்’ படம் துல்கர் சல்மான், வெங்கி அட்லுரி, மீனாட்சி சவுத்ரிக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தின் 2ம் பாகம் உருவாகும் என்று வெங்கி அட்லுரி தெரிவித்துள்ளார். சூர்யா, மமிதா பைஜூ நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடக்கிறது. இந்நிலையில் வெங்கி அட்லுரி அளித்த பேட்டியில், ‘சூர்யா 46’ படத்தின் கதைக்களம் குறித்து பேசியிருந்தார்.

அப்போது ‘லக்கி பாஸ்கர்’ 2ம் பாகம் குறித்தும் பேசினார். வெங்கி அட்லுரி கூறுகையில், ‘எனது முதல் 3 படங்களை முடித்த பின்பு, ஒரே ஜானரிலான படங்களையும், எமோஷனல் மெசேஜ் கலந்த படங்களையும் இயக்கக்கூடாது என்று முடிவு செய்து, ‘லக்கி பாஸ்கர்’ படத்தை இயக்கினேன். அதற்கு பிறகு பயோபிக் படங்களை இயக்குவதற்கே வாய்ப்பு வந்தது. ‘லக்கி பாஸ்கர்’ படத்துக்கு பிறகு பீரியட் படம், திரில்லர் படம், பயோபிக் படம் ஆகியவற்றை இயக்கக்கூடாது என்று உறுதியாக முடிவு செய்தேன். அளவற்ற மகிழ்ச்சி நிறைந்த குடும்பப்பாங்கான படங்களை மட்டுமே உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன்.

அந்த படங்களை பார்க்கும் மக்கள் சிரிக்க வேண்டும், அழ வேண்டும் என்று யோசித்து உருவாக்கி வரும் படம்தான் ‘சூர்யா 46’. எனவே, இப்படத்தை பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்திருங்கள்’ என்றார். ஆனால், ‘லக்கி பாஸ்கர் 2’ படத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி நடிப்பார்களா என்பது பற்றி அவர் சொல்லவில்லை.