Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மிஷன் இம்பாசிபிள் 8: இந்தியாவில் 2 நாளில் 34 கோடி ரூபாய் அள்ளியது; உலக அளவில் 540 மில்லியன் டாலர் வசூல்

மும்பை: கிறிஸ்டோபர் மெக்குவாரி இயக்கத்தில் டாம் க்ரூஸ் நடித்து வெளியாகி இருக்கும் ‘மிஷன் இம்பாசிபிள்: தி ஃபைனல் ரெக்கனிங் (பாகம் 8)’ திரைப்படம் முதல் நாளான மே 17ம் தேதி இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 16.5 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இதில், அதிகபட்சமாக ஆங்கிலத்தில் வெளியான ‘மிஷன் இம்பாசிபிள் 8’ திரைப்படம் 11 கோடி வரை வசூல் செய்துள்ளது. தமிழில் வெறும் 35 லட்சம் தான் வசூல் செய்தது. 2வது நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 17.69 கோடியாக வசூல் அதிகரிக்க ஒட்டுமொத்தமாக இந்தியாவில் மட்டும் 34.22 கோடி ரூபாய் வசூலை இந்த படம் 2 நாட்களில் ஈட்டியுள்ளது. இந்த ஆண்டு வெளியான எந்தவொரு ஹாலிவுட் படமும் இந்தளவுக்கு வசூல் ஈட்டவில்லை. பல பாலிவுட் படங்களே இப்படியொரு வசூல் சாதனையை படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் அதிகப்படியாக 540 மில்லியன் டாலர் வசூல் செய்துவிட்டது. 400 மில்லியன் டாலர் பொருட்செலவில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் ‘மிஷன் இம்பாசிபிள் 8’ திரைப்படம் 800 மில்லியன் டாலர் வசூலை ஈட்டினால் தான் லாபகரமான படமாக மாறும் என்கின்றனர். இரண்டே நாளில் 540 மில்லியன் டாலர் வசூலை ஈட்டிவிட்டதால் 800 மில்லியன் டாலரை தொடுவது சிரமமாக இருக்காது என சினிமா வர்த்தகர்கள் கூறுகின்றனர். இதுவரை வெளியான மிஷன் இம்பாசிபிள் வரிசை படங்களிலேயே ‘மிஷன் இம்பாசிபிள் ஃபால் அவுட்’ திரைப்படம் தான் அதிகபட்சமாக 790 மில்லியன் டாலர் வசூல் வேட்டையை நடத்தியுள்ளது. அதன் சாதனையை இப்படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.