Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஹீரோ - ஹீரோயினை இணைக்கும் மர்ம சம்பவம்

சென்னை: ஆர்எம்பி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் வி.ஜி. தனலட்சுமி கோபாலன் வழங்கும், அறிமுக இயக்குநர் பிரேம் நசீர் இயக்கத்தில் தர்ஷன்-மாளவிகா நடிக்கும் படம் ‘யாத்ரீகன்’. பிரேம் நசீர் கூறுகையில், ‘தயாரிப்பாளர் வி.ஜி. தனலட்சுமி மற்றும் ஆர்எம்பி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் திரைப்படங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். அவர்களுக்காக ஒரு படத்தை இயக்க என்னைத் தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி. ‘யாத்ரீகன்’ திரைப்படம் பயண வலைப்பதிவு அடிப்படையிலான திரைப்படம். இரண்டு வெவ்வேறு நபர்கள் மற்றும் அவர்களின் வெவ்வேறு சித்தாந்தங்களைப் பற்றியது. ஒரு மர்மமான சம்பவம் அவர்களின் பிரச்னைகளை எவ்வாறு பிணைக்கிறது என்பது படத்தின் மையக்கரு’ என்றார்.