Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

எங்களது அடுத்த ‘இலக்கு’ சல்மான் கான்: கனடாவில் பதுங்கியிருக்கும் தாதா பேட்டி

அமிர்தசரஸ்: பஞ்சாப் பாடகரை கொன்றது போல், எங்களது அடுத்த இலக்கு பாலிவுட் நடிகர் சல்மான் கான் என்று மறைமுகமாக கனடாவில் பதுங்கியிருக்கும் பிரபல தாதா கோல்டி ப்ரார் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் பஞ்சாப் பாடகர் சித்து முஸ்வாலா படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கனடாவில் பதுங்கியிருக்கும் ‘கேங்ஸ்டர்’ கோல்டி ப்ரார் என்பவன், தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘பாடகர் சித்து முஸ்வாலா, அகங்காரம், திமிர், சுயநலவாதி ஆவார். அரசியல் மற்றும் பணபலத்தை தவறாக பயன்படுத்தினார். அவருக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அதன்படி பாடத்தை (கொலை) கற்பித்தோம். எங்களது இலக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் (மான் வேட்டை விவகாரம்)

உள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய், சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த விஷயத்தில் மன்னிப்பு கேட்க மாட்ேடன் என்று கூறினார். எங்களது பாபா கருணை காட்டினால் மட்டுமே, அவர் கருணை காட்டுவார். எங்களது சகோதரத்துவம், தியாகத்தால் கட்டமைக்கப்பட்டது’ என்று கூறியுள்ளார். பாடகர் சித்து முஸ்வாலா கொலை வழக்கில் மூளையாக செயல்பட்ட கோல்டி ப்ரார், கனடாவில் தேடப்படும் முதல் 25 குற்றவாளிகளில் ஒருவராக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.