Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பேராவூரணி ‘மொய் விருந்து’ திரைப்படமானது

அர்ச்சனா, ரக்‌ஷன், ஆயிஷா, அபர்னதி, தீபா சங்கர், ‘பருத்திவீரன்’ சுஜாதா, மானஸ்வி, அருள்தாஸ், நாமோ நாராயணன், கஜராஜ், தங்கதுரை, மாறன், கிச்சா ரவி, முருகானந்தம், கொட்டாச்சி நடித்துள்ள படம், ‘மொய் விருந்து’. எஸ்.கே பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் எஸ்.கமலக்கண்ணன் தயாரித்துள்ளார். கதை, திரைக்கதை எழுதி சி.ஆர்.மணிகண்டன் இயக்கியுள்ளார். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசை அமைத்துள்ளார். புவன் எடிட்டிங் செய்ய, ஏ.ஆர்.மோகன் அரங்கம் அமைத்துள்ளார். மோகன் ராஜன், ஏகாதசி, அருண் பாரதி, கருமாத்தூர் மணிமாறன் பாடல்கள் எழுதியுள்ளனர்.

ஸ்ரீதர், ரகு தாபா, லீலாவதி நடனப்பயிற்சி அளித்துள்ளனர். கலை கிங்சன் சண்டைக்காட்சி அமைத்துள்ளார். படம் குறித்து சி.ஆர்.மணிகண்டன் கூறுகையில், ‘பேராவூரணி மொய் விருந்து நிகழ்ச்சியில் கோடிக்கணக்கில் மொய் வரும். இப்பழக்கத்தினால் ஊரே ஒழுக்கமாக இருக்கும். அனைவருக்கும் உதவி கிடைக்கும். கொடைக்கானல் பண்ணைக்காடு பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. தேசிய விருது பெற்ற அர்ச்சனா, கிராமத்து பாரம்பரிய மருத்துவச்சியாக நடித்துள்ளார். அவரது குடும்பம் மொய் விருந்து பழக்கத்தை கொண்டு வந்தாலும், ஒருகட்டத்தில் அவர்களால் திரும்ப நடத்த முடியாமல் தவிக்கின்றனர். அந்த பிரச்னைகள் எப்படி தீர்க்கப்படுகிறது என்பது கதை’ என்றார். வரும் பிப்ரவரி மாதம் படம் திரைக்கு வருகிறது.