Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பிரபு, வெற்றியின் ராஜபுத்திரன் ஷூட்டிங் முடிந்தது

சென்னை: கிராமத்து கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த குடும்பச் சித்திரமாக உருவாகிறது ராஜபுத்திரன். முதன்மை கதாபாத்திரத்தில் துள்ளல் கலந்த அப்பாவாக பிரபு மற்றும் 8 தோட்டாக்கள் வெற்றி இருவரும் முதல்முறையாக இணைந்து இருக்கின்றனர் கன்னடத்து பிரபலம் கோமல் குமார், கதாநாயகியாக கிருஷ்ண பிரியா மற்றும் இவர்களுடன் மன்சூர் அலிகான், ஆர் வி உதயகுமார், இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், தங்கதுரை நடிக்கிறார்கள். கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கேஎம். சபி தயாரிக்கிறார், இணை தயாரிப்பு பாரூக் பிக்சர்ஸ். வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுத, நவ்பல் ராஜா இசை. ஒளிப்பதிவு ஆலிவர் டேனி. மகா கந்தனின் இயக்கத்தில் ராஜபுத்திரன் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.