Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இந்தியாவை மிஸ் செய்த பிரியங்கா

கடந்த 2002ல் கோலிவுட்டில் ‘தமிழன்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாகவும், பாடகியாகவும் அறிமுகமானவர், முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா. பிறகு இந்தி படவுலகில் முன்னணி நடிகையாகி, தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப்தொடர்களில் நடித்து, அதிக சம்பளம் வாங்கி வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், ‘சமீபகாலமாக ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப்தொடர்களில் அதிகமாக நடித்து வருகிறேன். இதனால், இந்தியாவையும் மற்றும் இந்திய படங்களையும் ரொம்பவே மிஸ் செய்கிறேன்.

இந்த நேரத்தில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் பான்வேர்ல்ட் படத்தின் மூலம் மீண்டும் இந்திய சினிமாவுக்கு திரும்பியிருப்பது அதிக மகிழ்ச்சியை அளித்துள்ளது. என்னதான் ஹாலிவுட் படங்களில் நான் பிசியாக நடித்தாலும், இனிமேல் இந்திய படங்களிலும் தொடர்ந்து நடிப்பேன். இந்திய ரசிகர்களிடம் இருந்து எனக்கு எப்போதுமே நிறைய அன்பும், ஆதரவும் கிடைத்துள்ளது. அது இனிமேலும் தொடரும் என்று நம்புகிறேன்’ என்றார்.