சென்னை: தயாரிப்பாளரும், நடிகருமான மோகன் நடராஜன் (71), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். ராஜகாளியம்மன் எண்டர்பிரைசஸ் மற்றும் மூவிஸ் சார்பில் தரங்கை வி.சண்முகத்துடன் இணைந்து தமிழில் பூக்களை பறிக்காதீர்கள், என் தங்கச்சி படிச்சவ, வேலை கிடைச்சிடுச்சி, கோட்டை வாசல், விஜய் நடித்த கண்ணுக்குள் நிலவு, அஜித் குமார் நடித்த ஆழ்வார், சூர்யா நடித்த வேல்,...
சென்னை: தயாரிப்பாளரும், நடிகருமான மோகன் நடராஜன் (71), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். ராஜகாளியம்மன் எண்டர்பிரைசஸ் மற்றும் மூவிஸ் சார்பில் தரங்கை வி.சண்முகத்துடன் இணைந்து தமிழில் பூக்களை பறிக்காதீர்கள், என் தங்கச்சி படிச்சவ, வேலை கிடைச்சிடுச்சி, கோட்டை வாசல், விஜய் நடித்த கண்ணுக்குள் நிலவு, அஜித் குமார் நடித்த ஆழ்வார், சூர்யா நடித்த வேல், விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் ஆகிய படங்களையும் மற்றும் ரவுடி எம்எல்ஏ, சினேகா ஆகிய கன்னடப் படங்களையும் தயாரித்தார்.
கமல்ஹாசன் நடித்த ‘மகாநதி’ படத்தில் வில்லனாக நடித்த மோகன் நடராஜன், தமிழில் நம்ம அண்ணாச்சி, சக்கரைதேவன், கோட்டை வாசல், புதல்வன், பிள்ளைக்காக உள்பட பல படங்களில் நடித்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக நீணட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மோகன் நடராஜன், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். நடிகர் சூர்யா அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.