Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரவி அரசு இயக்கத்தில் சிவராஜ்குமார் நடிக்கும் ஜாவா

சென்னை: கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்த பல கன்னடப் படங்கள், தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில், ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்திலும், தனுஷ் நடித்திருந்த ‘கேப்டன் மில்லர்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்த சிவராஜ்குமார், தற்போது ‘ஜாவா’ படத்தின் மூலம் தமிழில் நேரடியாக ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.

ஒரே நேரத் தில் தமிழ், கன்னடத்தில் உருவாகும் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் வழங்குகிறார். செந்தில் தியாகராஜன், அர்ஜூன் தியாகராஜன் இணைந்து தயாரிக்கின்றனர். இதற்கு முன்பு அதர்வா முரளி நடித்த ‘ஈட்டி’, ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த ‘ஐங்கரன்’ ஆகிய படங்களை இயக்கி இருந்த ரவி அரசு, தற்போது ‘ஜாவா’ என்ற படத்தை எழுதி இயக்குகிறார்.

படத்தைப் பற்றி அவர் கூறுகையில், ‘முழுநீளமான ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படமாக உருவாகும் இது, சிவராஜ்குமாரின் தீவிரமான ரசிகர்களை 100 சதவீதம் திருப்திப்படுத்தும். தமிழ் பார்வையாளர்களையும் ஆரம்பம் முதல் இறுதிவரை ஈர்க்கும். வருகிற செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. ‘ஜாவா’ என்ற தலைப்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் கிளிம்ப்ஸ் காட்சியை அடுத்த வாரம் படமாக்குகிறோம். ‘ஜாவா’ பைக்கிற்கு முக்கிய பங்கு இருக்கிறது. அதிரடி போலீஸ் கேரக்டரில் சிவராஜ்குமார் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார்’ என்றார்.