Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தாயாக விரும்பும் 50 வயது பெண்மணி கதையில் ரேகா

சென்னை:‘கடலோரக் கவிதைகள்’ ரேகா கனமான வேடத்தில் நடிக்கும் ‘மிரியம்மா’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. மாலதி நாராயண் இயக்கும் இதில் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் நடிக்கின்றனர். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரெஹைனா இசை அமைக்கிறார். தாய்மை அனுபவத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராகும் மூத்த பெண்மணி ஒருவருடைய வாழ்வியலை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தை சாய் புரொடக்‌ஷன் தயாரிக்கிறது.

படம் குறித்து மாலதி நாராயண் கூறுகையில், ‘பெண்ணாகப் பிறந்த அனைவரும் பூப்பெய்திய பிறகு தாய்மை அடைந்தாக வேண்டும் என்று விரும்புவர். அவர்களின் வாழ்க்கைக்கு பற்றுக் கோடான இந்த விஷயத்தில், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்மணி ஒருவர் தாய்மை அடைய விரும்புகிறார். செயற்கை முறை கருவூட்டல் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் அவர் சந்திக்கும் பிரச்னைகளை மையப்படுத்தி இப்படத்தின் கதை உருவாகியுள்ளது’ என்றார்.