Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

விமர்சனம்: என் காதலே

தமிழ்நாட்டின் கலாசாரம் பற்றி தெரிந்துகொள்ள, வெளிநாட்டில் இருந்து காரைக் கால் மீனவ குப்பத்துக்கு குழுவினருடன் வருகிறார், லியா. பிறகு குப்பத்தை சேர்ந்த லிங்கேஷை லியா காதலிக்கிறார். லிங்கேஷை முறைப்பெண் திவ்யா தாமஸ் திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். அதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

குப்பத்து இளைஞனாகவும், லியாவிடம் ஆங்கிலம் பேசி அசத்துபவராகவும், திவ்யா தாமஸின் காதலை மறுப்பவராகவும் இயல்பாக நடித்திருக்கிறார் லிங்கேஷ். லண்டன் நடிகை லியா, ஒரே பாணியில் வசனத்தை ஒப்பிக்கிறார். அவரது அழகும், இளமையும் பரவசப்படுத்துகிறது. முறைமாமனுக்காக ஏங்கும் குப்பத்து பெண்ணாக, மலையாள வரவு திவ்யா தாமஸ் நன்றாக நடித்திருக்கிறார். மதுசூதன ராவ் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வில்லனாக காட்பாடி ராஜன் ஏதோ செய்வார் என்று பார்த்தால், அவரை அமைதியாக்கி விட்டார்கள். கஞ்சா கருப்பு, மாறன் காமெடி ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.

டோனிசான், வெங்கடேஷ் ஆகியோரின் ஒளிப்பதிவு, கடற்கரை மீனவ குப்பத்ைத அசலாக காட்டி அசத்தியிருக்கிறது. சாண்டி சாண்டல்லோ பின்னணி இசை உயிரோட்டமாக இருக்கிறது. பழைய கதையை, பழைய பாணியிலேயே சொல்லியிருக்கிறார், எழுதி இயக்கி தயாரித்துள்ள ஜெயலட்சுமி. சற்று மாற்றி யோசித்திருக்கலாம்.