Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மருத்துவமனையில் ரோஜா அட்மிட்

ஐதராபாத்: நடிகையும், அமைச்சருமான ரோஜா, ஆந்திராவில் ஒஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ரோஜா ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்து வருகிறார். தற்போது சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராகவும் உள்ளார்.இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ரோஜா நேற்று முன்தினம் இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கால் வீக்கம் காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இயக்குனர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் பிரசாந்திற்கு ஜோடியாக செம்பருத்தி படத்தில் 90களில் அறிமுகம் ஆனவர் ரோஜா. தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்தார்.