Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கோபத்தால் உருவான ‘ராயர் பரம்பரை’

சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சின்னசாமி மவுனகுரு தயாரித்துள்ள படம், ‘ராயர் பரம்பரை’. இதை ராம்நாத்.டி இயக்கியுள்ளார். கிருஷ்ணா, சரண்யா நாயர், கிருத்திகா, ஆனந்தராஜ், நான் கடவுள் ராஜேந்திரன், மனோபாலா, கஸ்தூரி, கே.ஆர்.விஜயா, ஆர்.என்.ஆர்.மனோகர், பாவா லட்சுமணன், சேஷு, டாக்டர் சீனிவாசன் நடித்துள்ளனர். வரும் 7ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து கிருஷ்ணா கூறுகையில், ‘கொரோனா முடிந்தவுடன் நடிக்க ஒப்பந்தமான படம் இது. முழுநீள நகைச்சுவைப் படமான இதில், இயக்குனரை மட்டுமே நம்பி களத்தில் குதித்தேன்.

ஒரு படத்துக்கு இயக்குனர் கேப்டன் என்றாலும், கப்பல் போல் இருப்பவர் தயாரிப்பாளர். அந்தவிதத்தில் சின்னசாமிக்கு நன்றி. எல்லா ஜவுளிக்கடை போட்டோவிலும் இந்த ஹீரோயின் போட்டோதான் இருக்கும். பிரபல மாடலான அவர் நன்றாக நடித்துள்ளார்’ என்றார். ராம்நாத்.டி கூறும்போது, ‘நேரில் பார்த்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து படத்தை உருவாக்கினேன். சமூகத்தின் மீது நான் கொண்ட அதீத கோபமே இப்படம் உருவாக முதல் காரணமாகும்’ என்றார்.