Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரூ.10 கோடி சம்பளம் கேட்ட சாய் பல்லவி

மும்பை: ராமாயணத்தை மையப்படுத்தி நிதேஷ் திவாரி இயக்கும் ‘ராமாயணம்’ என்ற மிகப் பிரமாண்டமான படம், பல்வேறு மொழிகளில் 3 பாகங்களாக உருவாக்கப்படுகிறது. இதில் ராமர் வேடத்தில் ரன்பீர் கபூர், சீதை கேரக்டரில் சாய் பல்லவி, ராவணன் கதாபாத்திரத்தில் யஷ், ஹனுமன் வேடத்தில் சன்னி தியோல், சூர்ப்பனகை கேரக்டரில் ரகுல் பிரீத் சிங் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது.

இதில் ரவீணா டாண்டன், அருண்கோவில் பங்கேற்ற போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் கசிந்தன. இந்தப்படத்தின் 2ம் பாகத்தில் யஷ் தொடர்பான காட்சிகள் இடம்பெறுவதால், அவருடைய காட்சிகளுக்கான ஷூட்டிங் சில மாதங்கள் கழித்து மும்பையில் தொடங்குகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிக்க சாய் பல்லவி தனக்கு ரூ.10 கோடி சம்பளம் கேட்டுள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது தமிழ்ப் படத்தில் நடிக்க நயன்தாராவும் ரூ.10 கோடி சம்பளம் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.