Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சலார் டீசர் வெளியானது

ஐதராபாத்: ‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கும் படம், ‘சலார்’. ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உள்பட பலர் நடிக்கின்றனர். சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம், செப். 28-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாகிறது. இப்படம் ‘கேஜிஎஃப்’ யுனிவர்ஸின் ஒரு பகுதியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதனை உறுதி செய்யும் வகையில் ‘கேஜிஎஃப்’ படத்தைப் போலவே அதே கறுப்பு கலர் டோன், புழுதி பறக்கும் ஆக்‌ஷன் காட்சிகள், பில்டப் வசனங்கள், வசனங்களை இழுத்து உச்சரித்தல் என சலார் டீசர் அமைந்துள்ளது.

‘கேஜிஎஃப்’ படத்தில் ஆனந்த் நாக் போல இதில் நடிகர் டின்னு ஆனந்த் கொடுக்கும் பில்டப்போடு டீசர் தொடங்குகிறது. ‘லயன், சீட்டா, டைகர், எலிஃபண்ட் வெரி டேஞ்சர்ஸ், பட் நாட் இன் ஜூராசிக் பார்க்’ என்ற வசனங்களின் பின்னணியில் அறிமுகமாகிறார் பிரபாஸ். ஆனால் அவரது முகம் முழுமையாக காட்டப்படவில்லை. சலார் பார்ட் 1 என டீசரில் காட்டப்படுகிறது. இதனால் இந்த படமும் இரண்டு பாகமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. பாகுபலி 2 படத்துக்கு பிறகு பெரும் வெற்றிக்காக காத்திருக்கும் பிரபாசுக்கு இந்த படம் திருப்பமாக அமைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.