Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சமந்தா விலகிய நிலையில் ராஷ்மிகா படம் டிராப்

ஐதராபாத்: ரஷ்மிகா மந்தனா ‘ரெயின்போ’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப் படத்தின் தொடக்க விழா நாகார்ஜுனாவின் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் ஓரிரு மாதம் முன் நடைபெற்றது. நடிகை அமலா இந்தப் படம் தொடங்கி வைத்தார். ‘சகுந்தலம்’ புகழ் தேவ் மோகன் இதில் ரஷ்மிகாவுக்கு ஜோடியாக நடித்தார். சாந்தரூபன் இயக்கினார். டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றது. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த இந்தப் படம் பாதியில் நின்று போனது. அதன் பிறகு எந்த புதிய தகவலும் வரவில்லை. கதை விஷயமாக சில கருத்து வேறுபாடுகள் காரணமாக படம் நிறுத்தப்பட்டதாகவும் பட்ஜெட் பிரச்னையால் படம் நின்றுவிட்டதாகவும் இருவிதமாக பேசப்படுகிறது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்க இருந்த இப்படத்தில் சமந்தா தான் கதாநாயகியாக தேர்வானார். ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை. அதன் பிறகு ராஷ்மிகா நடிப்பில் படம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.