Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சர்தார் 2வில் கார்த்தியின் லுக் வெளியானது

சென்னை: கடந்த 2022ம் ஆண்டில் வெளியாகி பாக்ஸ் ஆபீசில் ஹிட்டான படம் ‘சர்தார்’. இதில் கார்த்தி, ராசி கன்னா, ரெஜிஷா விஜயன், லைலா உள்பட பலர் நடித்தனர். இப்போது இதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ வெளியாக உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய பி.எஸ். மித்ரன் இரண்டாவது பாகத்தையும் இயக்கி வருகிறார்.

இதில் கார்த்தியுடன் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரெஜிஷா விஜயன், எஸ்.ேஜ.சூர்யா நடிக்கிறார்கள். முதல் பாகத்தைப் போல் இந்த பாகத்திலும் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அதில் அப்பா வேடம் பேசப்பட்டது. இரண்டாவது பாகத்தில் அந்த வேடத்தை ஸ்டைலிஷாக மாற்றியுள்ளனர். அதன் லுக் வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் தனது பிறந்த நாளை கார்த்தி கொண்டாடினார். அதையொட்டி இந்த லுக் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.